பிரதமரின் சவாலை ஏற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி

கொழும்பு, பெப் 10:

எதிர்க் கட்சிகளால் தேர்தலை சந்திக்க முடியுமா என பிரதமர் மகிந்த ராஜபக்ச விட்ட சவாலை ஏற்கத் தயாராக இருப்பதாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் புதன்கிழமை நடந்த ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘புதுஜன பேரணி’யில், எதிர்க் கட்சிகளால் தேர்தலை சந்திக்க முடியுமா என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சவால் விட்டிருந்தார்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான S. M. மரிக்கார் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில் ” ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு அரசை கேட்கிறோம். எதிர்க் கட்சிகளால் தேர்தலை சந்திக்க முடியுமா என பிரதமர் மகிந்த ராஜபக்ச விட்ட சவாலை ஏற்றுக் கொள்கிறோம். அடுத்த மாதம் அனுராதபுரத்தில் பிரதமர் பேசிய அதே சல்காடோ மைதானத்தில் பேரணியொன்றை நடத்தவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply