
வார இறுதி நாட்களில் நல்லதண்ணி-மஸ்கெலியா வீதியில் சுமார் 5 கிலோமீற்றர் வரை கடும் வாகன நெரிசல் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாத மலை யாத்திரைக்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் காரணமாக இவ்வாறு தொடர்ந்தும் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
நல்லதண்ணியிலுள்ள மூன்று பிரதான பஸ் நிலையங்களும் பிற்பகல் நேரங்களில் நிரம்பி வழியும் என பொலிஸார் தெரிவித்தனர்
யாத்திரிகர்கள் மஸ்கெலியா சுமன சமன் தேவாலயத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சுமார் 3 கிலோமீற்றர் தூரம் சிவனொளிபாத மலை அடிவாரத்துக்கு நடந்து செல்ல வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.





