
யாழ்ப்பாண மீனவர்களுக்கு யார் பாதுகாப்பு, யார் ஆதரவு என்றே தெரியாத நிலைமையில் தவித்து வருகின்றனர் என வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையால் வடக்கு மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இலங்கை கடல் படை,இலங்கை அரசாங்கம் எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.மீனவர்களின் சுப்பர் மட போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்றார்.
இந்த விடயம் தொடர்பில் சுப்பர் மட மீனவர் ஜேசுதாஸ் ராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்:
மீன்வர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்.ஆனால் அந்த போராட்டத்தையும் குழப்புவதற்கு பலர் சதித்திட்டம் தீண்டினர்.
அதையும் தாண்டி நாம் போராட்டம் நடத்தினோம்.அமைச்சர் வந்தார் எம்மை மதிக்காமல் தீர்வு தராமல் சென்று விட்டார்.எமக்கு யாரும் இல்லை.பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இந்திய ரோலர் மீனவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம்.ஆனால் போராட்டத்தை கைவிட மாட்டோம்.சாவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
டக்ளஸ் விரைவில் தூக்கில் தொங்குவார்! சபையில் கொதித்தெழுந்த கஜேந்திரன் எம்பி





