மண்ணெண்ணெய் அடுப்பு தீப்பற்றியதில் இளம் குடும்பப் பெண் படுகாயம்

மண்ணெண்ணெய் அடுப்பு தீப்பற்றியதில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தீக்காயமடைந்துள்ளார்.

யாழ். ஆறுகால்மடம் பகுதியில் நேற்று (9) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, மண்ணெண்ணெய் அடுப்பில் மண்ணெண்ணெய் தீர்ந்துள்ளது.

இதையடுத்து, மண்ணெண்ணெய் விட்ட போது, தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவத்தில் 30 வயதுடைய ஆ.தர்ஷிகா என்ற பெண்ணே காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய படகுகளின் ஏல விற்பனை நிறுத்தம்! ஏமாற்றத்துடன் திரும்பிய கொள்வனவாளர்கள்

Leave a Reply