
வவுனியா, பெப் 10: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தை வியாழக்கிழமை அங்குராப்பணம் செய்து வைக்கிறார்.
1991 ஆம் ஆண்டு வட மாகாணம் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழகம். 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.
கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக இது தரமுயர்த்தப்பட்டது.
இப் பல்கலைக்கழகத்தின் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், முறைப்படி அதனை அங்குராப்பணம் செய்து வைக்க ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிகழ்வில், முன் அனுமதி பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.





