300,000 மெட்ரிக் டன் பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய அரசு முடிவு

கொழும்பு, பெப் 10: பெரும் போகத்தில் விளையும் சுமார் 300,000 மெட்ரிக் டன் நெல்லை கொள்வனவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் டபிள்யூ.எச்.துமிந்த பிரியதர்ஷன கூறுகையில் “பெரும் போகத்தின் அறுவடையுடன், விவசாய சமூகத்தையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நெல் சந்தைப்படுத்தல் சபை போட்டி விலையில் நெல்லை பெற்றுக்கொள்கின்றன. இதனால், அறுவடை நெல்லை சந்தைப்படுத்தல் சபையிடம் விற்பனை செய்யுமாறு விவசாயிகளைக் கோருகிறேன். பெரும் போகத்தில் விளையும் சுமார் 300,000 மெட்ரிக் டன் நெல்லை கொள்வனவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply