சுகாதார தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்புக்கு இடைகால தடை உத்தரவு

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப் பகிஷ்கரிப்பை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு நாட்களாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், சட்ட மாஅதிபரினால் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஆராய்ந்த நீதவான், பணிப் பகிஷ்கரிப்புக்கு இடைகால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு நீதவான் அருண அளுத்கே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் நியமனம்

Leave a Reply