
அரசாங்கம் இராசயன உரத்துக்கு தடை விதித்துள்ள நிலையில் பெரும்போகத்துக்கான நெல் அறுவடை யாழ் மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சண்டிலிப்பாய்,கந்தரோடை , நவாலி பிரதேச விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
இம்முறை சேதன பசளையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு கூறியிருந்தது.
இது பெரும்போக அறுவடை எல்லோருக்கும் சேதன பசளை உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பில் பூரண விளக்கம் இல்லை. ஆகவே இயன்றளவு நாம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டோம்.
எனினும் வழமையாக கிடைக்கும் விளைச்சலில் அரைவாசிக்கு சற்று அதிகமாக கிடைத்துள்ளது.
இந்த நிலைமை நீடித்தால் அடுத்த முறை விவசாயம் செய்ய முடியுமோ தெரியவில்லை. அத்துடன் இம்முறை வைக்கோலின் அளவும் குறைந்துள்ளது. இதனால் கால்நடை தீவனமும் குறைந்துள்ளது என்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மாவட்ட விவசாயப்பிரிவின் தகவல்களின் அடிப்படையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 ஆயிரத்து 251 ஹேக்டயரில் இம்முறை நெற் செய்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
9 ஆயிரத்து 767 மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.








