
மாத்தளை-நாவுல பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி 46 வயது நபருடன் தம்புள்ளை பிரதேசத்தச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சந்தேக நபர் புதையல் தோண்டுவது போல் காட்டி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வாறு 7 பெண்களிடம் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நவகத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர் நவகத்தேக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் புதையல் தோண்டும் பாணியில் பெண்களிடமிருந்து பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்கள் பலவற்றை கையாடல் செய்துள்ளவர் எனவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.





