பெறுமதி குறைந்த இந்திய படகை 13 இலட்சத்திற்கு ஏலமெடுத்த இலங்கையர்

பெறுமதி குறைந்த இந்திய படகொன்றை நபரொருவர் அதியுச்ச விலைக்கு ஏலம் எடுத்துச் சென்றுள்ளார் 

இந்திய ட்ரோலளர் படகு ஒன்றை 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு ஏலம் எடுத்த மகிழ்ச்சியில் இலங்கையர் ஒருவர் வெளியேறி உள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய சமயம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விசைப்படகுகள் நேற்று முன்தினம் காரைநகரில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் ஏலமிடப்பட்டது.

இதன்போது அந்த இடத்திற்கு வருகை தந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் 5 லட்சம் ரூபா பெறுமதி கணிக்கப்பட்ட படகினை ஏலத்தில் தொடர்ச்சியாக போட்டியிட்டு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபா உட்ச தொகையை கேட்டு படகை பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு படகை பெற்ற மகிழ்ச்சியில் குறித்த நபர் வெளியேறி உள்ளார்.

Leave a Reply