ரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தழிழக மீனவர்கள்

இந்திய மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து தழிழக மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும்விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்று ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களினால் முன்னெடுக்கபட்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த7 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் எதிர்வரும்22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மீனவ விவகாரத்தில் இந்திய மற்றும் இலங்கை அரசு இணைந்து ஒரு கபட நாடகம் ஒன்றினை நடாத்தி வருகின்றனர் என வட மாகாணகடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என் வி சுப்ரமணியம் தெரிவிக்கின்றார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply