காரில் சென்ற லிபியா பிரதமரை கொல்ல முயற்சி

லிபியா நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் அல் திபய்பா காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.

லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறமை குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply