‘அப்பா’ பாதாள உலகக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை

மொரட்டுவஇ மோதரஇ எகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளளார்.

‘அப்பா’ என அழைக்கப்படும் துலான் சமீர சம்பத் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை சிப்பாய் ஒருவரும் சிறு காயங்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் மறைந்திருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பாணந்துறை சாலிதுவின் முக்கிய அடியாளே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply