
70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
10 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை பூர்த்தி செய்தல் போன்ற நிபந்தனைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
கைதிகளின் நலன் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அரசாங்கம் எவ்வாறாயினும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
கைதி செய்த குற்றச் செயலைப் பொருட்படுத்தாமல் அத்தகைய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
அமைப்பை மேம்படுத்தும் முடிவை எடுக்கும்போது, அவர்களது குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் அவலநிலையையும் கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இதேவேளை, விவாதத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் விஜேசேகர, ஒரு கைதிக்கு உணவுக்காக அரசாங்கம் நாளாந்தம் 300 ரூபாவை செலவிடுவதாக தெரிவித்தார்.





