
கொழும்பு, பெப் 11: மொரட்டுவை, ராவத்தவத்தை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டிருந்த நன்கொடைப் பெட்டியிலிருந்து ரூ. 1408 ஐ திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜதந்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் “சந்தேக நபர் பல்பொருள் அங்காடி ஒன்றில் இருந்த மூத்த குடிமக்களுக்கான நன்கொடைப் பெட்டியை உடைத்து திருட முயற்சித்தபோது, பல்பொருள் அங்காடி ஊழியர்கள் அவரைக் கைது செய்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.





