வவுனியாவிற்கு வருகைதந்த ஜனாதிபதி – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

வவுனியாவிற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதியின் அங்குராப்பண நிகழ்வில், ஊடகவியலாளர்கள் உள்நுழைவதற்ககு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா- மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விஜயம் செய்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகமானது 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.

கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைகழகமாக இது தரமுயர்த்தப்பட்டிருந்தது.

இதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி இன்று விஜயம் செய்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த இடத்திற்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இதன்போது முன் அனுமதி பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்களுக்கு மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply