
நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் குறித்த பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக இதுவரை 400 சிங்களமொழி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.





