
தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் கலந்துரையாடல் நாளை இடம்பெறவிருந்த நிலையில், திகதி பிற்போடப்பட்டுள்ளது.
நாளை 12ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் நடைபெறவிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கூட்டணிகளில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து இந்த அரசியல் கலந்துரையாடலை ஒழுங்கமைத்திருந்தன.
குறித்த கலந்துரையாடல், நாளை யாழ்ப்பாணம், இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய மழையுடனான காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் 16ஆம் திகதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





