
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குற்றம்சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (10) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த அனைத்து சந்தரப்பங்களையும் தவறவிட்டுள்ளது.
தேர்தல் வரும்போது மாத்திரம் பொங்களுக்கு தீர்வு, சித்திரைக்கு தீர்வு, தீபாவளிக்கு தீர்வு எனக்கூறி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒருவர் இருக்கிறார். அவருக்கு அடங்கா தமிழன் என்று புனைப் பெயர் கூட இருக்கிறது.
கடந்த மாகாணசபை தேர்தல் நேரத்தில் தமிழருக்கு தீர்வில்லையே சாகும் வரையில் உண்ணாவிரதம்; அடங்கா தமிழர் சூளுரை என போஸ்டர் ஒட்டினார்.
தேர்தல் முடிந்தது அவரின் ஆதரவாளர் வெற்றி பெற்றார். இறுதியில் இந்த போஸ்டரை மாடு திண்ணதுதான் மிச்சம் எனவும் தெரிவித்தார்.





