வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண புத்தியீவிகளுக்கு அழைப்பு

வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மாவட்ட மீனவர்களையும் இணைத்து ,மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்ன ராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாம் யாழ்,மன்னார், கிளிநொச்சி,முல்லைத் தீவு மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளோம். இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் சேர்ந்து மீனவர் பிரச்சினை தொடர்பில் தீர்வினை காணப் போகின்றோம.

இதுவரை காலமும் இந்திய மீனவர்களின் அத்து மீறல் பிரச்சனைக்கு தீர்வுகள் முன்வைக்கப் படவில்லை.

இந்த நிலை நீடித்தால் நாம் தொழிலை இழந்து தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆகவே எமது பிரச்சினைக்கு சாதகமான தீர்வை முன் வைப்பதற்கு புத்தியீவிகளை எதிர் பார்க்கின்றோம்.

அரசியல் தலைவர்கள் தமது கட்சி பேதங்களை மறந்து எம்முடன் கை கோர்க்க வேண்டும்.

இந்திய தூதரகம் சொன்ன வாக்கை எப்போதும் காப்பாற்றியது இல்லை. இல்லையென்றால் 5 வருடங்களுக்கு முன்னரே மீனவர் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். இனி யாருடைய வார்த்தையும் நம்புவதற்கு தயாரில்லை என்றார்.

Leave a Reply