போலித் தடுப்பூசி அட்டை: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

கொழும்பு, பெப் 11: கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கும் வகையில், சிலர் போலியான தடுப்பூசி அட்டைகளை அச்சடித்து பயன்படுத்துகிறார்கள். இது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று இலங்கை சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த டாக்டர் அன்வர் ஹம்தானி மேலும் கூறுகையில் ” நாட்டில் தடுப்பூசி போட்டவர்கள் தொடர்பான தகவல்கள் சுகாதார அமைச்சகத்தில் முறைப்படி பேணப்படுகின்றன. தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பது பயனற்றதொரு முயற்சியாகும். தடுப்பூசி போடுவது சமூகப் பொறுப்பாகும். எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். மேலும், நாட்டில் ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 5- 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply