
இலங்கையில் தயாரிக்கப்படும் பாடல்கள், திரைப்படங்கள் உலகளவில் பேசப்படுவதற்கு நாம் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும் என ‘விவசாயத் தந்தை’ திரைப்பட குழு தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தமிழ் சினிமாவுக்கு எம்மவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஆனால் இந்திய சினிமாவுக்கு இணையான பல தயாரிப்புகள் இலங்கையில் தமிழ் சிங்கள மொழியில் வெளிவந்துள்ளது.
ஆனால் அதை நாம் ஒதுக்குகின்றோம். வடக்கிலிருந்து வெளியிடப்படும் படைப்புகள் தெற்குக்கு தெரிவதில்லை, தெற்கில் வெளியிடப்படுவது வடக்குக்கு தெரிவதில்லை.
ஆகவே நாம் இனி இணைந்து செயற்பட வேண்டும். வடக்கு தெற்கு கலைஞர்கள் இணைந்து உலகம் வியக்கும் அளவில் படைப்புகளை வெளியிட வேண்டும்.
நாம் நாளை ‘விவசாயத் தந்தை’ என்ற திரைப்படத்தை தமிழில் யாழ்ப்பாணத்தில் வெளியிடவுள்ளோம்.
நஞ்சற்ற விவசாயம், இயறக்கை விவசாயம் ஆகியவற்றை முன்னுருமைப்படுத்தி இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு படத் தயாரிப்புகள் ஆரம்பமானது. 2018 ஆம் ஆண்டு தயாரிப்புகள் நிறைவடைந்தது. சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் நாளை யாழில் தமிழில் திரையிடப்படவுள்ளது.- என்றனர்.





