
மக்கள் விரும்பி கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டால் கொரோனா வைரஸ் தொற்றாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் பின்வரிசை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது,ஊடகவியாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில் டயானா கமகே மற்றும் ராதிகா விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்து கொந்துள்ளனர்.
கேள்வி: அனுராதபுரம் சல்காடு மைதானத்தில் கூட்டங்கள் நடைபெறும் போது கொரோனாத் தொற்று ஏற்படாதா?
பதில்: கூட்டத்திற்கு நாம் ஆட்களை அழைத்து வரவில்லை. மக்கள் விரும்பி வந்தார்கள் என்றனர்.
கேள்வி: நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் உங்கள் கருத்து?
பதில்: இவை ஜனாதிபதியும் அமைச்சர் பசிலும் செய்தவை அல்ல. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த காரியம் என்றனர்.
கேள்வி: மருத்துவ ஊழியர்களின் தற்போதைய பணிப்புறக்கணிப்பு?
பதில்: மருத்துவமனைகளுக்கு அருகில் மக்கள் அவதிப்படுவதைப் பார்க்கும்போது என் கண்களில் நீர் பெருகும். இது அவரவர் உணர வேண்டும். மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்தக் கூடாது.- என்றனர்.
குமாரபுரம் படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!





