கொரோனா மரணம் தொடர்பில் வெளியான தகவல்

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,754 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 373 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,348 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 624,545 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த யாசகரிடம் இவ்வளவு பணமா?

Leave a Reply