வவுனியாவில் காருடன் பேருந்து மோதி விபத்து: 5 பேர் படுகாயம்!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காருடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் கனகராயன்குளம் பகுதியில் வீதியின் எதிர் திசைக்கு திரும்ப முற்பட்டுள்ளது.

இதன்போது, அதே பாதையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காருடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாதையினை விட்டு விலகி அருகேயிருந்த ஓர் காணியினுள் புகுந்ததுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்பட்ட சிக்கல்: மக்கள் பாதிப்பு!

Leave a Reply