பால் மா, எரிவாயு, கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றுக்கு சிறிதளவு தட்டுப்பாடு: பசில் ராஜபக்ச

கொழும்பு, பெப் 11: நாட்டில் பால் மா, எரிவாயு, கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றுக்கு சிறிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர மற்றைய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதியமைச்சர் தலைமையில் குழுவொன்றை அமைத்திருந்தார். அந்தக குழுவின் கூட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசும்போதே பசில் ராஜபக்ச இதைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது: அரசினால் வழங்கப்பட்ட சலுகைகளை, சில வர்த்தகர்கள் துஷ்பிரயோகம் செய்து பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் கிடைப்பதை விரைவுபடுத்தவும், இதை ஒழுங்குபடுத்தி மேற்பார்வை செய்வதற்குமான புதிய பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply