போதைப் பொருள் வழக்கில் மாலைதீவு பிரஜைக்கு ஆயுள் தண்டனை

கொழும்பு, பெப் 11: போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாலைதீவை சேர்ந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

265 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் அவர் கைது செய்யப்பட்டார்.

இவருடன் கைது செய்யப்பட்ட இன்னொருவர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply