
அநுராதபுரத்தில் கூட்டம் கூடினால் அனைத்தும் சரிவராது. மக்கள் யார் சார்பில் இருக்கின்றனர் என்று அறிய தேர்தல் வையுங்கள் என ஐக்கிய பிரஜைகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.
நம்பிக்கை என்பது பணம் வழங்கி உணவு வழங்கி கூட்டத்திற்கு அழைத்து செல்வது அல்ல. மக்கள் உங்கள் பக்கம் என்றால் தேர்தலை வையுங்கள்.
கொரோனா பரவினால் அரசாங்கம் பதில் கூற வேண்டும். ஏனெனில் விவசாயிகளையும் ஆசிரியர்களையும் வீதிக்கு இறக்கியது அரசாங்கம். எனவே பதில் கூற வேண்டியது அரசாங்கமே.
ஆரம்பத்தில் தடுப்பூசி கேட்டு முதலில் பாணி பின்னால் சென்றனர். இறுதியில் தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் நன்கு விளங்கி கொண்டுதான் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து நம் நாட்டு மக்களின் கடலில் மீன் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். அதற்கு பதில் இல்லை. ஆனால் அங்கு சுதந்திர தினத்தன்று பெரிய கொண்டாடத்தில் இருந்தனர். நாட்டில் நடக்கும் அசாதாரண நிலமை குறித்து சற்று கருத்திற் கொள்ள வேண்டும்.- என்றார்.





