
தந்த வாக்குறுதிகளை தயவு செய்து செயற்படுத்துங்கள் என அரசிடம் அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந் நாட்டில் சுகாதார சேவையில் பாரிய வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத முறைப்பாடுகள்.
கடந்த காலங்களிலே கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் குறித்து அடிக்கடி நாங்கள் கோரிக்கை வைத்தும் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பட்டப்படிப்பை முடிக்காதவர்களை சேவையில் சேர்ப்பதை தடுப்பதற்கும், கர்ப்பிணி தாய்மார்கள் பணியாளர்களிற்கு விடுமுறை இரத்து செய்யப்பட்டிருந்தது, முக்கிய விடுமுறைகளை இரத்து செய்தமை மற்றும் சில முக்கிய காரணங்களை கூறி நாங்கள் போராட்டம் மேற்கொண்டோம்.
ஜூன் மாத சுகாதார பணிப்பாளர் நாயகத்தினுடாக நாம் கோரிய முக்கிய பிரச்சினைகளிற்கு தீர்வுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் நாம் மேற்கொண்ட போராட்டத்தில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் ஏற்பட்டது.
எனவே இப் பிரச்சினைக்கு அரசாங்கமே காரணம். கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவற்றை மறந்து விட்டு, தந்த வாக்குறுதிகளை மறந்து அதன் பிரதிபலனாக தற்போது இவ் வேலை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
எனவே நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுவது தந்த வாக்குறுதிகளை தயவு செய்து செயற்படுத்துங்கள்.- என்றுள்ளது.





