வர்த்தமானியில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்டபாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது, “2022.02.11ம் திகதியிடப்பட்ட 226655 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதில் வைத்தியசாலை, நேர்சிங் ஹோம்கள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் இதனுடன் ஒத்ததான நோயாளர் பராமரிப்பு சேவைகள்,மின்சார விநியோகம், வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply