நீதிமன்ற உத்தரவை மீறி தொடரும் சுகாதாரத்துறையினரின் வேலை நிறுத்தம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஆறாவது நாளாக தொடர்கிறது.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இரண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவில், தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.

தடை உத்தரவு குறித்து தங்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

வேலைநிறுத்தம் குறித்து பலமுறை எச்சரித்தும் சுகாதார அமைச்சின் செயலர் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என துணை மருத்துவ சேவைகளின் கூட்டு தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவு குறித்து தற்போது சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

வேலைநிறுத்தம் செய்யப்போவதாக கடந்த மூன்று மாதங்களாக எச்சரித்து வந்ததாகவும், சுகாதார செயலாளர் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply