இரத்தினம் தோண்டச் சென்ற இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு- இரத்தினபுரியில் சம்பவம்

இரத்தினபுரி- பெல்மடுல்ல, படலந்த பகுதியிலுள்ள வயல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், படலந்த பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத அகழ்வுக்குச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply