இந்திய கடனுதவி தொடர்பாக மிலிந்த மொரகொட- இந்திய நிதியமைச்சர் பேச்சு

புது டெல்லி, பெப் 12: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை இறுதி செய்வது தொடர்பாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடா ஆகியோர் வெள்ளிக்கிழமை புது டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய நிதியமைச்சரை சந்தித்து, இந்தியா இதுவரை வழங்கிய ஆதரவுக்கு மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்தார். மேலும், இந்த கஷ்டமான நேரத்தில், இலங்கைக்கு ஆதரவளிக்க நிர்மலா சீதாராமன் எடுத்துள்ள தனிப்பட்ட ஆர்வத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார். இதன்போது, இலங்கை அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய, 1 பில்லியன் டாலர் கடன் தொகை வழங்கப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply