<!–
கர்நாடகத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படும் சூழலில் ஹிஜாப் விவகாரத்தால் கல்லூரிகளின் விடுமுறை 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் திறக்கப்படுவதை முன்னிட்டு உடுப்பி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பொலிஸாரின் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர்கள் அமைதி காக்கும்படி உயர்நீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






