காதலர் தினத்தில் மரம் நடுகை திட்டம்: சுற்று சூழல் துறை அமைச்சு நடவடிக்கை

கொழும்பு, பெப் 12: காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற தொனிப் பொருளில், மரம் நடும் திட்டத்தை இலங்கை சுற்று சூழல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை சுற்று சூழல் அமைச்சகம், பாதுக்கவில் உள்ள என்.எஸ்.பி.எம். பசுமைப் பல்கலைக்கழகம், இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம், இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து காதலர் தினமான வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இந்த இந்த மரம் நடும் திட்டத்தை நடத்துகின்றன.

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்றும், இதுபோன்ற மரம் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அன்று சுமார் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply