மூடநம்பிக்கையால் சிறுவனை காப்பாற்ற தவறிய தாய்க்கு விளக்கமறியல்!

படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

இச் ம்பவம் தொடர்பில், உயிரிழந்த சிறுவனின் தாயாரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், தந்தை மற்றும் பாட்டி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்போது, அவ்வீட்டில் உள்ள அறையொன்றின் கட்டிலில் 10 வயது சிறுவனின் சடலம் கிடந்தது.

இச்சிறுவன் கடந்த 7 ஆம் திகதியன்று தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் சிறுவனை அழைத்துச் செல்லவில்லை.

மாறாக, சிறுவனை அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை பிரார்த்தனைகளை நடத்தியுள்ளனர். எனினும், சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அதன்பிறகு, சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதாக அவரது பெற்றோர் தொடர்ந்தும் சமயப் பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், எந்த சந்தர்ப்பத்திலும் சிறுவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிரதிவாதிகளின் தரப்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, கைதானவர்கள் தமது பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுவதில் மூட நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தமது குழந்தையைக் காப்பாற்றும் நோக்கத்தில் அனைத்தையும் செய்ததாகவும், அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்த மரணத்தினால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாகவும் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் முறைப்பாட்டை பதிவு செய்த படல்கம பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து, தாயார் தாயார் துஷங்க மதுவந்தியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தந்தை சுமித் ஜானக மற்றும் பாட்டி பத்மநாதன் மாலினி ஆகியோர் தலா 500,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அராலி செட்டியர் மடம் சந்தியில் கோர விபத்து – இளைஞர் சாவு!

Leave a Reply