
சென்னை, பெப் 12: இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட் டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பது: இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





