தேர்தல் முறைகளின் கலவையாக உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பேச்சு

கொழும்பு, பெப் 12:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எளிய பன்முக (first – past – the post), விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைகளின் கலவையாக நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி, 60 வீதமான பிரதிநிதிகளை எளிய பன்முகத் தேர்தல் முறையிலும், மிகுதி 40 சத வீதமான பிரதிநிதிகளை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழும் தெரிவு செய்வது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் உள்ள கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைகளில் உரிய சீர்திருத்தங்களை கொண்டுவர தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்யவும் பாராளுமன்ற தெரிவுக் குழு அதன் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையில்
கூடியது. இதன்போது, இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில், அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை கோரும் போதே பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், உள்ளூராட்சி மன்றங்களில் தற்போதுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது

Leave a Reply