திருகோணமலையில் தமிழ் பாரம்பரிய கலைகளின் சங்கமம்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் திருகோணமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த “தமிழ் பாரம்பரிய கலைகளின் சங்கமம்” நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெறுள்ளது.

குறித்த நிகழ்வு, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

தொன்று தொட்டு பேணப்பட்டு வந்த தமிழ் பாரம்பரியங்களை பேணி பாதுகாப்பதன் அவசியம், அவற்றின் முக்கியத்துவம் உட்பட பல விடயங்கள் இதன் போது கலைஞர் பெருமக்களால் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலைஞர்கள் உட்பட துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply