
தற்போதைய அரசாங்கம் பல மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கின்றப்போது சிறந்தவர்களை நியமிப்பதாகவும் கூறியே ஆட்சி பீடம் ஏறியது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்
கம்பொல பகுதியில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் கூறியதைப் போன்று நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கின்றப்போது, ஊழல் அற்ற வினைத்திறனானவர்களை நியமிப்பார்கள் என்றே மக்கள் எதிர்ப்பார்த்தார்கள.
ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் ஒவ்வொரு நிறுவனங்களிலும் அடிக்கடி தலைவர்களை மாற்றிக்கொண்டு இருப்பதனையே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மேலும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிறுவன தலைவர்கள் ஊழலுடன் தொடர்புபட்டவர்கள் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி பாதையை நோக்கியே சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக பொருளாதார அமைச்சர், தனது நிலைப்பாட்டினை இன்னும் கூறாமல் இருக்கின்றார்.
கடந்த வாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் அதற்கான விடைகளும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
நிதியமைச்சர் வேலைப்பலு உள்ளவராக இருக்கலாம். ஆனால் நாட்டில் சில பிரச்சினைகள் பேசுப்பொருளாக மாறுகின்றப்போது மக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் தெளிவுப்படுத்த வேண்டியப் பொறுப்பு நிதியமைச்சருக்கு இருக்கின்றது.
மேலும் இவ்வாறான நிதி நெருக்கடிகளை சந்திக்கின்றப்போது, நாடாளுமன்றத்தில் ஆலோசனைகளை பெற்று, தீர்வொன்றினை முன்வைப்பது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் துரதிஸ்டவசமாக இன்று நிதியமைச்சர், அதற்கு மாறாக நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றார்.
குறித்த விடயங்களை நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதனை ஒருபுறம் வைத்து விடுங்கள். மாறாக அமைச்சரவையில் தெளிவுப்படுத்துவார் என்று பார்த்தால் அதுவும் இல்லை என்றுதான் தெரிகின்றது.
ஆகையினால்தான் அமைச்சர்கள், வெளியில் வந்து வௌ;வேறு விதமான தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





