
2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 228 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள் மீதி உள்ள வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.
வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, 75 இலட்சம், 50 இலட்சம், 40 இலட்சம், 30 இலட்சம், 20 இலட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியிடம்தான் ஏலத்தில் எடுக்க அதிக தொகை உள்ளது. அந்த அணியிடம் கைவசம் 72 கோடி இருக்கிறது.
டெல்லி அணிக்கு 47.5 கோடியும், கொல்கத்தா, மும்பை அணிகளுக்கு தலா .48 கோடியும், ராஜஸ்தானுக்கு 62 கோடியும், பெங்களூருக்கு 57 கோடியும், ஐதராபாத்துக்கு 68 கோடியும் எஞ்சி உள்ளன.
புதிய அணிகளான லக்னோவிடம் 58 கோடியும், அகமதாபாத்திடம் 52 கோடியும் கைவசம் உள்ளன.
தற்போது இடம்பெற்று வரும் ஏல விபரங்களை தற்போது பார்க்கலாம்.
* இந்தியக் கிரிக்கெட் அணியின் ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
* இந்தியக் கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.





