வட்டுக்கோட்டை வீட்டில் நுழைந்த பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – ஒருவர் கைது!

வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில், 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 100 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றையதினம் (11) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் அவரது வீட்டிலிருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply