யாழ் வைத்தியசாலையொன்றில் விடுதி நோயாளிகளிற்கு மருந்து வழங்கவில்லையென முறைப்பாடு!

யாழ். வைத்தியசாலையொன்றில் விடுதியில் தங்கியிருந்த நோயாளிகளிற்கு கடந்த 7ஆம் திகதி மருந்து வழங்கப்படவில்லையன குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நோயாளியொருவர் வடக்கு ஆளுநருக்கு எழுத்துமூலம் முறைப்பாடளித்துள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது.

கடந்த 7ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்கள் பல வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தன.

அன்று, யாழ் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையொன்றின் விடுதியொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நோயாளிகளிற்கே மருந்து வழங்கப்படவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தாதிய தொழிற்சங்க தரப்பை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறிப்பிட்ட சம்பவத்திற்கும், தாதிர் பணிப்புறக்கணிப்பிற்கும் தொடர்பில்லையென மறுத்தனர்.

அன்று தாதியர்கள் பலர் பணிக்கு சென்றிருந்ததாகவும், வைத்தியசாலை நிர்வாக ரீதியான காரணமே இப்படியான சம்பவத்திற்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply