சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு முன்பாக சுகாதார சேவையில் உள்ளவர்களின் சம்பளம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் முதலில் தீர்வை வழங்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதை நிலையில் எமது நாடு மிகவும் குழுப்பகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் நிர்வாகத்துறை நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முடிவு எடுக்க முடியாத நிலைமைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் சுகாதாரத்துறையினர் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் உரிமைக்காக பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக நோயாளர்களும் நாட்டு மக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





