வடமாகாணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வவுனியா பல்கலையின் அங்குராப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வர்வேற்புரையை வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாந்தி த.மங்களேஸ்வரன் தமிழில் நிகழ்த்தியுள்ளார்.
இந் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இதில் துணைவேந்தர் தமிழில் தொடங்கிய உரை தமிழிலேயே முடிவடைந்துள்ளது. தமிழ் உரை தொடங்கியவுடன் பலர் கைதட்டல்களை வழங்கியிருந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றது.
துணைவேந்தர் தனது உரையில், பல்கலைக்கழகத்திற்கு என்ன தேவை என்பதையும், பல்கலை தொடங்கிய வரலாற்றையும் சொல்லியதோடு, மருத்துவ பீடம் உட்பட எதிர்காலத்தில் அமைக்க உத்தேசித்துள்ள 8 பீடங்கள் தொடர்பான விடயங்களை ஜனாதிபதிக்கும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.





