எரிபொருள் பாவனையைக் கட்டுப்படுத்த கூப்பன் திட்டம்! – வாசுதேவ

நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் கூப்பன் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் போது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

ஆனால், மேல் தட்டு வர்க்கத்தின் செல்வாக்குக் காரணமாக தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேல்தட்டு மக்கள் இத்தகைய முறையை விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply