
ஹூதி கிளர்ச்சியாளர்களால் சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்இ தாக்குதலில் காயமடைந்தவர்களில் சவுதி அரேபிய பிரஜைகள் இருவரும் இந்திய பிரஜை ஒருவரும் பங்களாதேஷ் பிரஜைகள் நால்வரும் நேபாளத்தை சேர்ந்த மூவரும் அடங்குகின்றனர்.
தாக்குதலையடுத்து, சவுதி கூட்டு இராணுவத்தினர், யேமன் தலைநகரிலுள்ள ஹூதி கிளர்ச்சிக்குழுவினரை இலக்கு வைத்து நேற்று அதிகாலை தாக்குதல் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





