சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று ஏழாவது நாளாக தொடர்கிறது.
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு குறித்து தங்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று பல சுகாதார சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில்,
நாட்டின் மருத்துவமனை அமைப்பில் எந்தவிதமான உயிரிழப்புகள் அல்லது சிக்கல்கள் ஏற்படாமல் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர முடிந்தது.
நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக போராட்டம் நடத்துகிறோம்.
10 சிறப்பு மருத்துவமனைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவில்லை.
அவர்கள் தொடர்ந்து அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.





