<!–
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 பேர் கைத செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






