
திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் 1.68 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், கந்தளாய் – சூரியபுர பகுதியில் நேற்றிரவு பதிவாகியுள்ளது.
விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் வசமாக சிக்கி உள்ளார்.
இதன்போது, திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த டேவிட் சுசந்த குமார (38 வயது) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகளின் பின்னர் அவரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





